நாகவம் கரணம்!

மனித குல வளர்ச்சிக்கு மாபெரும் உறுதுணை யாக அமைந்திருக் கும் ஜோதிட சாஸ்திரத்தில், பெரும்பங்கு வகிக்கக்கூடிய கரணங்கள் நிகழ்த்தும் அற்புதங்கள் ஆகச்சிறந்தவையாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

11 கரணங்களின் வரிசையில் நாகவம் 9-ஆவது கரணமாக இடம் பெற்றுள்ளது.

Advertisment

இந்த நாகவம் கரணத்தில் பிறந்தவர்கள் பிறரைவிட புகழ்ச்சியை விரும்பும் நபர்களாக இருக்கின்றனர்.

இவர்களைப் புகழ்வதன்மூலமாக இவர்களிடமிருந்து பல வேலைகளை சாதித்துக்கொள்ள முடியும். சிறந்த பிரசங்கங்களை, ஆன்மிக மற்றும் அறிவார்ந்த சிந்தனைகளை போதனை செய்வதில் இவர்களுக்கு நிகர் இவர்கள் மட்டுமே.

தன்மானத்தை உயிரைவிட மேலாக மதிப்பவர்கள் இவர்கள்.

மண்ணுக்கு அடியிலிருந்து எடுக்கப் படும் அத்தனை தொழில் சார்ந்த விஷயங்களிலும் இவர்கள் உயர்நிலையை எட்டுவார்கள்.

Advertisment

உதாரணமாக சுரங்கம், தாது வெட்டி எடுப்பதுபோன்ற தொழிலின் மூலம் தன்னை உயர்த்திக் கொள்ளும் மாபெரும் ஆற்றல் படைத்தவர்கள்.

தனக்கான இருப்பிடத்தை பிரம்மாண்டமான சூழலில் ஏற்படுத் திக் கொள்ளக் கூடிய யுக்தி இவர்களிடம் இயல்பிலேயே பொதிந்திருக்கும்.

தன்னுடன் ஒத்து வராத நபர்களை ஓரம் கட்டுவதிலும், அவர்கள்மீது வஞ்சனை வைத்து பழிவாங்குவதிலும் கைதேர்ந்தவர்களாக விளங்குவார்கள்.

Advertisment

மருத்துவம் சார்ந்த தொழில்கள், மரம் அறுப்பது, கற்களை செதுக்குவது, சிற்ப வேலைகள், டைல்ஸ் வேலை, கேக் ஷாப், மார்க்கெட்டிங், மாயாஜாலம், லேத், கிணறு தோண்டுதல், போர் போடுதல் போன்ற வேலைகளை எளிதாகச் செய்கின்றனர். மேலும் அதன் மூலம் அதீத அளவு வருமானத்தை ஈட்டும் ஆற்றலும் பெற்றிருக்கின்றார்கள்.

இவர்களிடம் ஆயிரம் நல்ல குணங்கள் இருப்பினும் பழிவாங்கும் ஒரு குணம் சற்று முரண்பாடாக பிறரிடம் தெரியும்.

விஷப் பாம்புகளைப் பிடிக்கும் ஆற்றல் படைத்தவர்கள் இவர்கள்.மேலும் விஷக்கடிக்கு மருந்து கொடுத்து அதன்மூலம் பெயர், புகழ், வருமானம் போன்றவற்றையும் பெறுகின்றனர்.

இவர்கள் ஆன்மிகம், யோகம் போன்ற படிநிலைகளில் பயணிக்கும் பொழுது சிறந்த ஞானியாகக்கூடிய அமைப்பும் உருவாகும்.

எங்கு சென்றாலும் பிழைத்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் படைத்தவர் கள் இந்த நாகவ கரணத்தில் பிறந்தவர் கள். மற்றவர்களுக்குத் தீங்கிழைக்கும் பொழுது சற்றும் குற்றணர்ச்சி இல்லாமல் நடந்துகொள்வார்கள்.

போராட்டங்கள் மற்றும் புரட்சிகளின் மூலம் தங்களின் பெயரை எதிர்மறையாக உருவாக்கிக் கொள்வார்கள்.

சி.பி.ஐபோல எல்லா குற்றங்களையும் ஆழ்ந்து துருவி கண்டுபிடிக்கும் வல்லமை பெற்றவர்களாக இருப்பார்கள்.

உடல்ரீதியான சுகங்களின்மூலம் ரத்தம் தொடர்பான நோய்களால் கடுமையாக பாதிக்கப்படும் கரணங்களில் இந்த நாகவ கரணமும் ஒன்று. இவர்களின் உடல் மொழியிலும் பார்வைத் திறனிலும் பழகும் முறையிலும் ஒரு விஷப்பாம்பின் தன்மை ஒளிந்திருக்கும்.

பிறருக்காகத் தன்னை அர்ப்பணிக்கும் குணம் படைத்த இவர்கள், ஆறு மாதத்திற்கு ஒருமுறை தங்களது குணத்தை மாற்றிக்கொள்வார்கள்.

எல்லா இடர்ப்பாடுகளையும் தங்களின் குடும்பத்திற்கு ஏற்றாற்போல் சுகமாக மாற்றி வாழும் தன்மையும், தகுதியும் இவர்களிடையே இருக்கும்.

இவர்களின் வம்சத்தில் புற்று வழிபாடு செய்தவர்கள் இருப்பார்கள்.

அதிதேவதை- ஜராகு

மிருகம்- நாகம்

மலர்- ஓலைப்பூ

நைவேத்தியம்- நெய்

தூபம்- சாம்பிராணி

தெய்வம்- நாகர்கோவிலிலுள்ள நாகராஜா.

இவர்கள் வீட்டின் அருகிலுள்ள புற்று மற்றும் அதைச் சார்ந்த தெய்வங்களை வழிபடுவது மிகச் சிறப்பினை அளிக்கும்.

இஷ்ட தெய்வம் மற்றும் வீட்டில் வழிபடும் தெய்வங்களுக்கு கல் பாத்திரத்தில் நெய் வைத்து சாம்பிராணி தூபமிட்டு, ஓலைப்பூ என்று சொல்லக்கூடிய தாழம்பூக்களைச் சூட்டி வழிபட்டுவர எல்லா இன்னலும் நீங்கும்.

மேலும் நாகர்கோவிலில் அமைந்துள்ள நாகராஜா கோவிலுக்கு ராகு காலத்தில் சென்று பாக்கு மட்டையில் 11 கமலா ஆரஞ்சு 11 வெற்றிலை 11 பாக்குகளுடன் தட்சிணை வைத்து அர்ச்சனை செய்துவழிபட, எல்லா இன்னலும் இறையின் ஆசியால் நீங்கி சுபிட்சமான வாழ்வை பெறமுடியும்.

இவர்களின் கைபேசியில் ஆதிசேஷன் என்கின்ற பாம்பின் வடிவத்தை ஸ்கிரீன் சேவராக வைத்துக்கொள்வதன்மூலம் பல இன்னல்களைத் தவிர்க்கமுடியும்.

செல்: 80563 79988